மாவட்ட செய்திகள் மார்ச் 12,2022 | 12:13 IST
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் கோபி வயது 20. அதே பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த 6 ஆம் தேதி சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுறது. மகள் காணாமல் போனது குறித்து வாணியம்பாடி போலீசில் பெற்றோர் புகார் செய்தனர். வாணியம்பாடி பஸ் நிலையத்தில் சிறுமியுடன் நின்ற கோபியை போலீசார் கைது செய்தனர். சிறுமி பெற்றோர் வசம் ஒப்படைக்கப்பட்டார். போக்சோ சட்டத்தின் கீழ் கோபி கைது செய்யப்பட்டார்
வாசகர் கருத்து