மாவட்ட செய்திகள் மார்ச் 18,2022 | 10:41 IST
உலகம் முழுவதும் முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது கடலூர் மாவட்டம், நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் உள்ள வேலுடையான்பட்டு சுப்பிரமணியர் கோவில் 700 ஆண்டுகள் பழமையான கோயில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திர திருவிழா இந்த கோவிலில் வெகு விமரிசையாக நடைபெறும். கோவிட்டால் 2 ஆண்டுகள் விழா நடக்கவில்லை. தொற்று குறைவால் ஆண்டு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்காவடி,எடுத்து நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
வாசகர் கருத்து