மாவட்ட செய்திகள் மார்ச் 22,2022 | 00:00 IST
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த மாதம் 10க்கும் மேற்பட்ட இடங்களில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை அடிக்கப்பட்டது. போலீசார் கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, சேலத்தை சேர்ந்த விஜய், ஜெயப்பிரகாஷ், சண்முகம் கொள்ளையில் ஈடுபட்டதை உறுதி செய்தனர். தனிப்படை போலீசார் அவர்களை கைது செய்து, ஆயுதங்கள், செல்போன், 5 ஆயிரம் ரூபாய், பைக்கை பறிமுதல் செய்தனர். 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மூவர் மீதும் பல்வேறு இடங்களில் கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வாசகர் கருத்து