மாவட்ட செய்திகள் மார்ச் 24,2022 | 15:29 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னானி அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில், கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் சேகர், கல்வியின் அவசியம் மற்றும் பழங்குடியின பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டியதன் அவசியம் குறித்து பேசினார். மாணவர்கள், பெற்றோர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசு வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சி நடந்தது.
வாசகர் கருத்து