பொது மார்ச் 25,2022 | 22:08 IST
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னா புரத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். விவசாயி. இவருக்கு 2 ஏக்கர் விவசாய நிலத்தை அரசு வழங்கியிருந்தது. நிபந்தனை பட்டாவாக இருந்ததை முழு உரிமை பட்டாவாக மாற்றித் தரும்படி தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளர் மகேந்திர வில்சனை அணுகினார். அதற்கு 50 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக மகேந்திர வில்சன் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத ராஜேந்திரன் இதுபற்றி திருப்பூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் செய்தார். போலீசார் கொடுத்த ரசாயனம் தடவிய 25 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மகேந்திர வில்சனிடம் ராஜேந்திரன் கொடுத்தார். அப்போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் மகேந்திர வில்சனை கையும் களவுமாக கைது செய்தனர். விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து