Advertisement

லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது!

மாவட்ட செய்திகள் மார்ச் 29,2022 | 00:00 IST

Share

விழுப்புரத்தில், திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூரை சேர்ந்தவர் பிரகாஷ். குடும்ப சொத்தை, பெயர் மாற்றம் செய்ய வேண்டி இணை சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகினார். சார் பதிவாளர் பொறுப்பில் உள்ள சங்கரலிங்கம், 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். பணம் தர விரும்பாத பிரகாஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீஸ் அறிவுரைப்படி, ரசாயனம் தடவிய பணத்தை பிரகாஷ் கொண்டுபோய் கொடுத்தார். சார் பதிவாளர் சங்கரலிங்கம் அதை பெற்றபோது, போலீசார் அவரை கைது செய்தனர். 4 மாதங்களில் அவர் ஓய்வு பெறவுள்ள நிலையில் லஞ்ச வழக்கில் சிக்கியுள்ளார்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X