மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2022 | 00:00 IST
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியில் இயங்கி வந்த காலணி தொழிற்சாலை பெண் தொழிலாளர்களை ஏற்றி சென்ற வேன் நேற்று விபத்துக்குள்ளாகி 5 பேர் இறந்தனர். 26 பேர் படுகாயமடைந்தனர். இதனை தொடர்ந்து ஆம்பூர் பகுதிகளில் இயங்கும் 20 க்கும் மேற்பட்ட காலணி தொழிற்சாலைகளில் தொழிலாளர்களை ஏற்றி வரும் வேன்களின் தரத்தை ஆம்பூர் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் அமர்நாத் இன்று ஆய்வு மேற்கொண்டார். வாகன ஓட்டுநர்கள் உரிய பாதுகாப்புடன் வாகனத்தை இயக்க அறிவுறுத்தினார்
வாசகர் கருத்து