Advertisement

பள்ளிக்கு செல்ல வழி அடைப்பு மாணவர்கள் போராட்டம்

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 01,2022 | 00:00 IST

Share

புதுச்சேரி அடுத்த ஆண்டியார் பாளையம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் படிக்கின்றனர். மெயின் ரோட்டிலிருந்து பள்ளிக்குச் செல்ல தனியார் ஒருவரின் நிலத்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். கிராம மக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர், ஆசிரியர்கள் ஆகியோர் தனியார் நிலத்தை முறைப்படி கையகப்படுத்தி சாலை வசதி ஏற்படுத்தித் தருமாறு கல்வித்துறைக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நிலத்தின் உரிமையாளர் பலமுறை மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியை அடைத்து, மாணவர்களின் நலன் கருதி வழியை திறந்து வைத்துள்ளார். பல ஆண்டுகளாக அரசு மேற்படி நிலத்திற்கு உண்டான தொகையை வழங்காததால் நில உரிமையாளர் பள்ளிக்குச் செல்லும் சாலையை வேலி போட்டு அடைத்து விட்டார். இன்று பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர்கள் அதிர்ச்சி அடைந்து பெற்றோர்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தவளகுப்பம் போலீசார் நிலத்தின் உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X