பொது ஏப்ரல் 01,2022 | 22:15 IST
870 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7 சதவீதம் உயர்ந்துள்ளது. காய்ச்சலுக்கு பயன்படும் பாரசிட்டமால் மற்றும் அசித்ரோமைசின், டாசிசைக்ளின் போன்ற ஆண்டிபயாடிக் மருந்துகள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதிக்கான மருந்துகள், கோவிட் தடுப்பு மருந்துகள் போன்றவற்றின் விலைகள் உயர்ந்துள்ளன. ரத்தக்குழாய் அடைப்பை நீக்க பயன்படும் ஸ்டென்ட், செயற்கை மூட்டுகள், தகடுகள் போன்றவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. விலை உயர்வால் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே விலை உயர்வை திரும்பப்பெற வேண்டும் என்று ஆல் இண்டியா ட்ரக் ஆக்க்ஷன் நெட்வொர்க் எய்டன் AIDAN வலியுறுத்தியுள்ளது. அனைவருக்கும் குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த தன்னார்வ அமைப்பு செயல்படுகிறது.
வாசகர் கருத்து