மாவட்ட செய்திகள் ஏப்ரல் 07,2022 | 00:00 IST
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்த கடேஸ்வரர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அபிராமி அம்மன், அமிர்த கடேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் கொடிமரம் அருகில் எழுந்தருளினார். கொடி மரத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பஞ்சமுக கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏப்ரல் 9ம் தேதி திருக்கல்யாணமும், 14 ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. ----
வாசகர் கருத்து