மாவட்ட செய்திகள் ஏப்ரல் 08,2022 | 00:00 IST
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுண்ணாம்புகாளை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜக்கிரியா. வயது 17. வீட்டில் தண்ணீர் தொட்டி பழுதை சரி செய்வதற்காக மொட்டை மாடி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி மீது உரசியதால், மின்சாரம் தாக்கி சுருண்டு விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஆம்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். ----
வாசகர் கருத்து