மாவட்ட செய்திகள் ஏப்ரல் 11,2022 | 00:00 IST
விழுப்புரம் மாவட்டம், கன்னிகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் டி. கேணிப்பட்டு பகுதியை சேர்ந்த கிரிதரன் (30), ரவி ஆகிய இருவரும் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த கேரளா பதிவெண் கொண்ட கார் டூவீலரில் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு, அதே இடத்தில் இருவரும் இறந்தனர். மயிலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து