Advertisement

நகராட்சி தலைவியிடம் கவுன்சிலர் அடம்

அரசியல் ஏப்ரல் 12,2022 | 14:43 IST

Share

தேனி அல்லிநகரம் நகராட்சி தோ்தலில் மொத்தம் உள்ள 33 வார்டுகளில் திமுக 19 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக 7 வாா்டுகளிலும், காங்கிரஸ், அமமுக தலா 2, பாஜக 1, சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றது. பெரும்பான்மையுடன் நகராட்சியை கைப்பற்றிய திமுக, தலைவர் பதவியை கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கியது. ஆனால் 10வது வார்டில் திமுக சார்பில் வெற்றி பெற்ற  ரேணுப்பிரியா, 20வது வார்டில் வெற்றி பெற்ற கணவரும், நகர திமுக பொறுப்பாளருமான பாலமுருகன் துணையுடன் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றினார். கட்சி தலைமை உத்தரவுக்கு எதிராக தலைவர் பதவியை பிடிக்க மற்ற கவுன்சிலர்களிடம் பேரம் பேசிய தம்பதியின் முயற்சி வெளிச்சமாகி உள்ளது. கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு அழைக்கும் நகராட்சி தலைவரிடம், 29வது வார்டு கவுன்சிலர் சந்திரகலா ஈஸ்வரி ஓட்டு போட்டதற்கான கமிஷன் கேட்கும் அடியோ வெளியாகி உள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X