மாவட்ட செய்திகள் ஏப்ரல் 12,2022 | 16:13 IST
வேலூரில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா அரசு நிதியுதவி பள்ளியில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டமான வேலூர்,ராணிப்பேட்டை,திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவ,மாணவிகள் பங்கேற்ற அறிவியல் கண்காட்சி நடைபெற்றது, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கண்காட்சியை துவக்கி வைத்தார். வேலூர் மேயர் சுஜாதா,முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் சூரியஒளி மின் உற்பத்தி, இயற்கை வழியில் பெட் ரோல் தயாரித்தல், தானியங்கி ரோபோ ஜேசிபி, தானியங்கி டூவீலர் இண்டிகேட்டர் உள்ளிட்ட மாணவர்களின் 250க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் இக்கண்காட்சியில் இடம் பெற்றன.
வாசகர் கருத்து