Advertisement

கலெக்டர் நடவடிக்கையால் மீட்பு

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 15,2022 | 12:28 IST

Share

தஞ்சாவூர், நாஞ்சிக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட காவேரி நகரில் வயதான மூதாட்டி ஒருவர் வீட்டு சிறையில் உள்ளார் என்ற தகவல் சமூக நல ஆர்வலருக்கு கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்திற்கு சென்று பார்த்துள்ளார். அங்கு மூதாட்டி ஒருவர் சாப்பாட்டுக்கு பதில் மண்ணை சாப்பிட்டுள்ளார். இதை வீடியோவாக எடுத்த சமூக நல ஆர்வலர் ஜெயச்சந்திரன் வாட்ஸ் அப்பில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு அனுப்பினார். கலெக்டர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டார். விசாரணையில் அந்த மூதாட்டியின் பெயர் ஞானஜோதி (62) என்பதும் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் என்பதும், அவருடைய இரண்டு மகன்களில் மூத்த மகன் சென்னையில் காவல்துறை ஆய்வாளராக பணிபுரிகிறார் என்பதும், இரண்டாவது மகன் தூர்தர்ஷனில் பணியாற்றுபவர் என்பதும் தெரிந்தது. கணவர் இறந்த நிலையில் மகன்கள் கைவிட்டதால் மூதாட்டி இந்த நிலைக்கு தள்ளப்பட்டது தெரிந்தது. தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார், சமூக நலத்துறை குழுவினருடன் சென்று வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருந்த ஞானஜோதியை மீட்டு மருத்துவ சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X