மாவட்ட செய்திகள் ஏப்ரல் 15,2022 | 12:33 IST
கரூர் மாவட்டம் சந்தையூரை சேர்ந்தவர் மகாலிங்கம். அவரது மனைவி பழனியம்மாள். வக்கீல்களான இந்த தம்பதியின் 14 வயது மகள் சாதனா. 4 வயது மகன் யஸ்வந்த் மற்றும் உறவினர்கள் விஸ்வநாதன். தமிழ்ச்செல்வி, கிருத்திகா ஆகியோருடன் திருவாரூர் ஆலங்குடி குரு பகவான் கோயிலுக்கு காரில் சென்றார். காரை மகாலிங்கம் ஓட்டினார். திருச்சி அருகே புதுக்குடி டோல்கேட் அருகே சென்ற போது, திருச்சியில் இருந்து தஞ்சை நோக்கி சென்ற அரசு பஸ், காரின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பழனியம்மாள் ஸ்பாட்டிலேயே உயிரிழந்தார். காயமடைந்தவர்களை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சாதனா இறந்தார். துவாக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து