Advertisement

கார் - வேன் மோதல் 2 பேர் பலி 4பேர் காயம்

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 15,2022 | 13:33 IST

Share

கள்ளக்குறிச்சி மாவட்டம், ஏமத்தூர் பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள்,2ஆண்கள் சிங்கார பேட்டையில் நடககும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்றனர். கார் இன்று காலை திருவண்ணாமலை- செங்கம் சாலையில் கிரிவலப் பாதை பிரிவு அருகில் சென்றபோது, திருவண்ணாமலைக்கு வேகமாக வந்த ஒருவேன், நேருக்கு நேர் மோதியது. விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது . இதில் கார் டிரைவர் மற்றும் ஒரு பெண் அதே இடத்திலேயே இறந்தனர். காரில் இருந்த 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் காயமடைந்தனர். வேன் டிரைவர் தப்பி ஓடிவிட்டார். திருவண்ணாமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பலியான கார் டிரைவர் பெயர் பாலன் என்பதும் ,பலியான பெண் ஏமத்தூர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் மனைவி வனஜா என்பதும் தெரியவந்துள்ளது.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X