சம்பவம் ஏப்ரல் 16,2022 | 22:24 IST
பொள்ளாச்சி, மாரியப்பன் வீதியை சேர்ந்த 72 வயது நாகலட்சுமி, மகன் செந்திலுடன் வசித்து வந்தார். மகன் வேலைக்கு சென்றுவிட வீட்டில் தனியாக இருந்த நாகலட்சுமி, கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் அணிந்திருந்த வளையல், செயின், கம்மல் உள்ளிட்ட 15 பவுன் நகைககள் மாயமாகி இருந்தன. அப்பகுதியில் இருந்த சிசிடிவி வீடியோக்களை ஆராய்ந்தனர். ஒரு சிறுமி நாகலட்சுமி வீட்டுக்கு வந்து செல்வது பதிவாகி இருந்தது. 17 வயது சிறுமியை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். சிறுமி வீட்டில் சோதனை நடத்தியபோது, நகைகள் அங்கு இருந்தன. நாகலட்சுமியை கொலை செய்ததை சிறுமி ஒப்பு கொண்டார். ஒருவரை காதலிப்பதாகவும், திருமணத்துக்கு நகை தேவைப்படும் என்பதால் கொலை செய்து திருடியதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர். காதலனையும் பிடித்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து