Advertisement

திமுக பிரமுகர் லாரி மோதி 2 பேர் பலி

சம்பவம் ஏப்ரல் 19,2022 | 12:17 IST

Share

திருவள்ளூர் அடுத்த மணவாளநகரை சேர்ந்தவர் செல்வகுமார் வயது 42. இவரது, மனைவியின் சகோதரி கணவர்  பிரவீன் சோப்ரா வயது 34 மணவாள நகர் சென்றார். தொழில் விஷயமாக, இருவரும் இரவில் ஒரே பைக்கில் வெளியில் புறப்பட்டனர். திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது பைக் மீது மணல் லாரி மோதியது. லாரிக்கு அடியில் சிக்கிய இருவரும் உடல்நசுங்கி இறந்தனர். பயந்துபோன டிரைவர், லாரியை அங்கேயே விட்டு, விட்டு தப்பி ஓடிவிட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் லாரியின் உரிமையாளர் திருவள்ளூர் மாவட்ட திமுக வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஜெ.பவுல் என்பது தெரிந்தது. பவுல் மனைவி ருக்மணி திருவேற்காடு நகராட்சி கவுன்சிலராக உள்ளார். பவுல், ஆந்திராவிலிருந்து மணல் ஏற்றி வந்து  திருவள்ளூர் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்து வருகிறார். டிரைவரை போலீசார் தேடுகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X