சம்பவம் ஏப்ரல் 19,2022 | 00:00 IST
போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ. மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். ரொனால்டோவின் மனைவி ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் Georgina Rodriguez ஆண், பெண் என இரட்டைக் குழந்தைகளை கருவில் சுமப்பதாக கடந்தாண்டு அக்டோபரில் இருவரும் அறிவிப்பு வெளியிட்டனர். இந்நிலையில், நேற்று பிரசவம் நடந்த நிலையில், ஆண் குழந்தை இறந்து விட்டது. பிறந்துள்ள பெண் குழந்தை மட்டுமே இத்தருணத்தில் நம்பிக்கை, மகிழ்ச்சியை அளிப்பதாக இருவரும் கூறியுள்ளனர். ரொனால்டோவுக்கு ஏற்கனவே, கிறிஸ்டியானோ ஜூனியர், மேடியோ என்ற 2 மகன்களும், ஈவா, அலனா என்ற 2 மகள்களும் உள்ளனர்.
வாசகர் கருத்து