சம்பவம் ஏப்ரல் 21,2022 | 00:00 IST
மதுரை கப்பலுார் டோல்கேட்டில் நேற்றிரவு 11.30 மணிக்கு கார் ஒன்று வந்தது. டோல்கேட் ஊழியர்கள் கட்டணம் கேட்டனர். அப்போது முன் சீட்டில் இருந்த ஆசாமி துப்பாக்கியை காட்டி மிரட்டினார். டோல்கேட் ஊழியர்கள் திரண்டு வந்து, காருக்குள் இருந்த மூவரையும் மடக்கி பிடித்து, திருமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் தென்காசியை சேர்ந்த ஜெயக்குமார், முத்துக்குமார், பொன்ராஜ் என தெரிந்தது. மூவரும் மது போதையில் இருந்தனர். அவர்களை திருமங்கலம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து இரண்டு ஏர்கன் துப்பாக்கிகள், 36 பால்ரஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து