Advertisement

கடத்தல் போட்டியில் இளைஞர் கொலை

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 21,2022 | 00:00 IST

Share

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் மதன்குமார். வயது 21. மீன்பிடி தொழிலாளி. ஆலந்தலையை சேர்ந்த லயோ என்பவருடன் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தார். இலங்கைக்கு சட்டவிரோத பொருட்கள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து மதன்குமார் போலீசுக்கு தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது. மதன்குமார், லயோ அவரது நண்பர்கள் மரியஅந்தோணி, மல்லையா ஆகியோர் மறவன்விளை காட்டுப்பகுதியில் மது அருந்தியுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு மதன்குமாரை மற்ற மூவரும் அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். தலை, கை, கால்களை துண்டாக்கி பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர். சரியாக எரியாததால் மண்ணை தோண்டி புதைத்து விட்டு சென்றனர். இதுகுறித்து அறிந்த போலீசார் லயோ, மரிய அந்தோணி, மல்லையாவை கைது செய்தனர். மதன்குமார் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இதற்கு பின்னணியில் திமுக பிரமுகர் ராஜா, ஜாக்சன் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X