பொது ஏப்ரல் 23,2022 | 16:59 IST
ஆந்திராவின், விஜயவாடா அருகே குலாபி பேட்டையை சேர்ந்தவர் சிவக்குமார். கார்பெட் 14 CORBETT 14 என்ற இ-ஸ்கூட்டரை 1.40 லட்சத்துக்கு வாங்கினார். அதன் பேட்டரியை தனியாக கழற்றிச்சென்று, படுக்கை அறையில் இரவில் சார்ஜ் போட்டு விட்டு தூங்கியுள்ளார். அதிகாலையில், பேட்டரி வெடித்து தீப்பிடித்தது. வீட்டின் மின்சார ஓயர்களிலும் தீப்பற்றி, வீடு முழுவதும் பரவியது. கரும்புகை சூழ்ந்தது. உயிர் தப்பிக்க, மனைவி, குழந்தைகளுடன் கிச்சனுக்குள் புகுந்தார் சிவக்குமார். அங்கிருந்து வெளியேற முடியாமல் கூச்சலிட்டுள்ளனர். அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து அவர்களை மீட்டனர். மருத்துவமனை செல்லும் வழியில் சிவக்குமார் இறந்தார். மனைவி ஆர்த்தி, குழந்தைகள் பத்து வயது பிந்து, ஆறு வயது சசி ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இச்சம்பவம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து