மாவட்ட செய்திகள் ஏப்ரல் 25,2022 | 16:26 IST
புதுச்சேரி ,முத்தியால்பேட்டை டி.வி. நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி அனிதா. சேதராப்பட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். அனிதா தனது 18 பவுன் நகைகளை பீரோவில் வைத்து, சாவியை மறைவான இடத்தில் வைத்து சென்றார். வேலை முடிந்த வீடுக்கு வந்தபோது நகை டப்பா கீழே கிடந்தது. அதிர்ச்சியடைந்த அதனை பார்த்தபோது, அதில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. மர்ம நபர்கள் பீரோ சாவியை எடுத்து நகைகளை திருடியது தெரிய வந்தது. அனிதா முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், பெண் ஒருவர் அனிதாவின் வீட்டிற்குள் சென்று வருவது தெரியவந்தது. அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து