மாவட்ட செய்திகள் ஏப்ரல் 26,2022 | 00:00 IST
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் திருப்பைஞ்ஞீலி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை ஞீலிவனேஸ்வரர் கோயில் பழமையானது. ரிஷப வாகனத்தில் சிவபெருமான், அப்பர் பெருமானுக்கு காட்சி தந்த புராண வரலாறு பெற்றது. திருமண தடை நீக்கும் பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. இக்கோயில் விழாக்களில் கட்டமுது வழங்கும் விழா பிரசித்தி பெற்றது. விழாவையொட்டி இன்று .காலை ஞீலிவனேஸ்வரர் கோயிலில் இருந்து அப்பர் பெருமான், ஞீலிவனேஸ்வரர் சாமி புறப்பாடு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கட்டமுது வழங்கும் நிகழ்விடம் சென்று அங்கு அப்பர் சாமிக்கு, சிவபெருமான் கட்டமுது வழங்கிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜை, தீபாராதனைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து