மாவட்ட செய்திகள் ஏப்ரல் 26,2022 | 00:00 IST
நீலகிரி மாவட்டம் குன்னூர் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் கடந்த டிசம்பர் 8 ம் தேதி ஹெலிகாப்டர் விபத்து நடந்தது. இதில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் உயிரிழந்தனர். விபத்தின் போது மீட்பு பணியில் நஞ்சப்பா சத்திரம் கிராம மக்கள் ஈடுபட்டனர். அவர்களுக்கு மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் மற்றும் ராணுவ மருத்துவமனை சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 4 வது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை, மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன. கோவை தனியார் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை முகாம் நடந்தது.
வாசகர் கருத்து