மாவட்ட செய்திகள் ஏப்ரல் 28,2022 | 14:04 IST
திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் சித்திரை பிரமோற்சவ தேரோட்டம் நாளை நடைக்கிறது. இதையொட்டி ஸ்ரீவில்லிப்புத்துார் ஸ்ரீஆண்டாள் கோயிலில் இருந்து வஸ்திரங்கள், பட்டுப்புடவை, கிளி, மாலை உள்ளிட்ட மங்கள பொருட்கள் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது. நாளை நடக்கும் தேரோட்டத்தை முன்னிட்டு வஸ்திரங்களை ஸ்ரீரங்கநாத பெருமான் மற்றும் தாயார் அணிந்து எழுந்தருள்வர். நாளை காலை 6.30 மணிக்கு தேரோட்டம் கோலாகலமாக நடைபெறவுள்ளது.
வாசகர் கருத்து