Advertisement

மலேசியாவுக்கு கடத்த இருந்த 12 டன் செம்மரம் பறிமுதல்

மாவட்ட செய்திகள் ஏப்ரல் 28,2022 | 20:27 IST

Share

தூத்துக்குடியிலிருந்து மலேசியா போர்ட் கிலாங் துறைமுகத்திற்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக பெங்களுர் வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் கிடத்தது, தூத்துக்குடி தனியார் சரக்கு பெட்டி முனையத்தில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் திருப்பூர், ராதாகிருஷ்ணன் நகர், பிச்சம் பாளையம் என்ற முகவரியில் உள்ள தனியார் நிறுவனம், இரும்பு பைப்புகளை ஏற்றுமதி செய்ய வைத்திருந்த மரப்பெட்டிகளை சோதனை செய்தனர். அதில் முன் பக்கத்தில் உள்ள பெட்டிகளில் மட்டும் இரும்பு குழாய்களை வைத்து பின்புறம் முழுதும் செம்மரக்கட்டைகளை மறைத்து எடுத்து வந்தது தெரிந்தது. இதனையடுத்து, ஏற்றுமதிக்காக வைத்திருந்த 12 டன் செம்மரத்தை பறிமுதல் செய்தனர். திருப்பூரை சேர்ந்த மோகன் குமார் என்பவரையும், சரக்கு ஏற்றி வந்த லாரி டிரைவரையும் அதிகாரிகள் தேடி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X