பொது ஏப்ரல் 30,2022 | 10:04 IST
அம்பாசமுத்திரம் அருகே பள்ளக்கால் பொதுக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் சில நாட்களுக்கு முன்பு மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. சாதி அடையாளத்தை காட்டும் வகையில், கைகளில் வண்ணக் கயிறு கட்டியது தொடர்பாக மாணவர்கள் சண்டை போட்டனர். பிளஸ் 2 மாணவர் சூர்யா தாக்கப்பட்டார். பாளை ஐகிரவுண்டு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்ற சூர்யா இறந்தார். கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.
வாசகர் கருத்து