பொது மே 02,2022 | 18:02 IST
ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையம் வந்த ராணுவ வீரர் ஒருவரின் பேக்கில், வெடிகுண்டு இருந்தது ஸ்கேனர் மூலம் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த விமான நிலைய ஊழியர் சிஆர்பிஎப் அதிகாரிகளுக்கு தகவல் சொன்னார். வெடிகுண்டை கைப்பற்றி ராணுவ வீரரிடம் விசாரித்தனர். அவரது பெயர் பாலாஜி சம்பத். தமிழகத்தை சேர்ந்தவர். வேலூர் தான் சொந்த ஊர். விடுமுறையில் ஊருக்கு செல்வது தெரியவந்தது. அவர் கொண்டு வந்தது சக்தி வாய்ந்த கையெறி வகை குண்டு. ஊருக்கு சென்றவர், எதற்காக வெடிகுண்டை எடுத்து வந்தார்? என்பது குறித்து விசாரணை நடக்கிறது.
வாசகர் கருத்து