பொது மே 02,2022 | 20:27 IST
3 நாள் அரசு முறை பயணமாக ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் நாடுகளுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். ஜெர்மனியில் மோடிக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் பெர்லினில் அந்நாட்டு பிரதமர் ஓலப் ஸ்கால்சை Olaf Scholz சந்தித்தார். ஜெர்மனி, இந்தியா பேச்சுவார்த்தை 2 ஆண்டுக்கு ஒருமுறை நடப்பது வழக்கம். அதன்படி, 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் 2 பிரதமர்களும் பங்கேற்றனர். இரு நாட்டு உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர். 2 நாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதாரத்தை மேம்படுத்துவது, சர்வதேச வளர்ச்சிக்கு ஒத்துழைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. உக்ரைன் மீதான ரஷ்ய போர் குறித்தும் பேசினர். 2021 டிசம்பரில் ஜெர்மன் பிரதமராக ஸ்கால்ஸ் பதவி ஏற்றார். அதன் பிறகு அவர் மோடியை சந்திப்பது இதுவே முதல் முறை. ஜெர்மனியுடன் பேச்சு வார்த்தை முடித்த மோடி, செவ்வாய்க்கிழமை டென்மார்க், புதன்கிழமை பிரான்ஸ் செல்கிறார்.
வாசகர் கருத்து