Advertisement

டீனாக மீண்டும் ரத்தினவேல் நியமனம்

மாவட்ட செய்திகள் மே 04,2022 | 16:09 IST

Share

மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் சமஸ்கிருத உறுதிமொழி வாசித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் மீது அரசு நடவடிக்கை எடுத்தது. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு மதுரை சென்று விசாரணை நடத்தினார். சமஸ்கிருத உறுதிமொழி ஏற்பது பற்றி டீன் ரத்தினவேலுக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது; அவர் மீது எந்த தவறும் இல்லை என தெரிய வந்தது. சமஸ்கிருத கருத்துக்கள் கொண்ட உறுதிமொழியை மாணவர்கள் தவறுதலாக பதிவிறக்கம் செய்ததே சர்ச்சைக்கு காரணம் என தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து, ரத்னவேல் மீது எடுத்த நடவடிக்கையை அரசு வாபஸ் பெற்றுக்கொண்டது. மதுரை மருத்துவக்கல்லூரி டீனாக ரத்தினவேல் மீண்டும் நியமிக்கப்படுவதாக சட்டசபையில் சுகாதார அமைச்சர் சுப்பிரமணியன் அறிவித்தார். ரத்தினவேல், கோவிட் நோய் பரவிய காலத்தில் சிறப்பாக பணியாற்றியவர். எனவே, அவர் அளித்த விளக்கத்தை அரசு ஏற்றுக் கொண்டது என்றார், சுப்பிரமணியன்


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X