மாவட்ட செய்திகள் மே 04,2022 | 16:25 IST
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சிதம்பரம் சாலையில் இரணிய நகர் உள்ளது. இப்பகுதியில் ஒருவர் சட்ட விரோதமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். பைக்கில் வந்த 3 ஆசாமிகள் ஆயுதங்களுடன் கடையில் புகுந்தனர். லாட்டரி சீட்டு விற்பனை செய்துகொண்டிருந்த பணியாளரை தாக்கினர். மற்ற ஊழியர்களிடம் இருந்து செல்போனை பிடுங்கினர். கல்லாவில் இருந்த 3 லட்சம் ரூபாயை திருடி தப்பினர். இது குறித்து சீர்காழி போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து