பொது மே 05,2022 | 14:50 IST
ஓட்டல் பிரியாணி சாப்பிட்டதும் வாந்தி மயக்கம் 14 பேர் அட்மிட் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள செந்தமில் நகரில் சித்திரவேல் என்பவரின் வீட்டில் காங்கிரட் வேலை நடந்து வருகிறது. அங்கு வேலை பார்க்கும் கொத்தனார் சித்தாள் 40 பேருக்கு அறந்தாங்கியில் உள்ள ஏ1 என்ற ஓட்டலில் இருந்து சிக்கன் பிரியாணி ஆடர் செய்தார் சித்திரவேல். சாப்பிட்டதும் 14 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களை அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். போலீசார் விசாரணை நடத்துகின்றனர். பிரியாணி கடையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தரமற்ற உணவு வழங்கியதால், கடைக்கு சீல் வைத்தனர்.
வாசகர் கருத்து