பொது மே 06,2022 | 18:24 IST
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கத்தில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. இந்நிலையில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி சனி மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடமேற்கில் நகரும். 8 ம்தேதி புயலாக உருவெடுக்கும். ஆந்திரா ஒடிசா இடையே 10ம் தேதி கரையை கடக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் தமிழகம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, ஒடிசா மாநிலங்களில் நாளை பரவலாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைப்பட்ட நாட்களில் 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். அந்தமான், மத்திய மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலுக்கு அசானி Asani என பெயர் சூட்டப்பட உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து