மாவட்ட செய்திகள் மே 08,2022 | 13:52 IST
ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அடுத்த பழைய பாளையம் மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ வேணுகோபால உடனாய திருவாத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் விமரிசையாக தேர்த்திருவிழா நடைபெறும். இந்த வருடம் 33ஆம் ஆண்டு தேர்த்திருவிழா இன்று நடந்தது. அம்மனுக்கு ஊர் பொதுமக்களால் பால்குடம் எடுத்து அபிஷேகம் நடந்தேறியது. பின் பொங்கல் வைத்து படையலிட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து திருவாத்தம்மன், விநாயகர் உள்ளிட்ட சுவாமிகள் தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பக்தர்கள் நேர்த்திக் கடனை செய்து அம்மனை வழிபட்டனர்.
வாசகர் கருத்து