மாவட்ட செய்திகள் மே 08,2022 | 14:37 IST
கோவை மாவட்டம், காரமடையை அடுத்துள்ள சாஸ்திரி நகரில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நேற்றிரவு காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் , சாஸ்திரி நகரில் நடராஜ் வீடு இடிந்து விழுந்தது சுவற்றில் ஈரத்தன்மை ஏற்பட்டு ஒரு பக்க சுவர் விழுந்து சேதமடைந்தது. சுவர் இடிந்தபோது வீட்டின் உரிமையாளர் நடராஜும்,அவரது மகன் ரஞ்சித் குமாரும் வீட்டினுள் உறங்கி கொண்டிருந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக இருவரும் உயிர் தப்பினர். மேட்டுப்பாளையம் வட்டாச்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு விசாரனை நடத்தினர் கோவை
வாசகர் கருத்து