பொது மே 12,2022 | 00:00 IST
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்த 75 வயது கோவிந்தம்மாள் வீட்டை அக்கம்பக்கத்தினர் ஆக்கிரமித்தனர். தன் கணவர் வாழ்ந்த வீட்டில் அவர் நினைவோடு வாழ வேண்டும் என்பதற்காக வீட்டை திரும்ப பெற போராடி வந்தார் கோவிந்தம்மாள். கலெக்டர் ஆபிசுக்கு பல முறை சென்றும் பலன் கிடைக்கவில்லை என தினமலரில் செய்தி வெளியானது. விடியோவை பார்த்த கலெக்டர் அடுத்த நாளே கோவிந்தம்மாளை சந்தித்து பட்டா வழங்கினார். அவரை இனி யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள் என உறுதி அளித்தார். #govindammal #DinamalarExclusive
வாசகர் கருத்து