மாவட்ட செய்திகள் மே 12,2022 | 00:00 IST
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பல்லலகுப்பம் காப்புக் காட்டில் மான் வேட்டையாடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது பல்லலகுப்பம் காப்புக் காட்டில் மானை வேட்டையாடி அதை கறியாக்கிய நாவீதம்பட்டி பகுதியை சேர்ந்த சந்தோஷ் குருநாதபுரம் பகுதியை சேர்ந்த ஏழுமலை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 10 கிலோ மான்கறி, மான்தோல், தலை மற்றும் டூவீலரை பறிமுதல் செய்தனர். பேர்ணாம்பட்டு வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து