பொது மே 13,2022 | 00:00 IST
சென்னை, திருவொற்றியூரை சேர்ந்தவர் சக்கரபாணி. வயது 65. திமுக ஏழாவது வட்ட பிரதிநிதி. பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். கொடுத்த கடனுக்கு வட்டிப்பணம் வாங்க செல்வதாக கூறிவிட்டு, 10ம் தேதி வீட்டில் இருந்து புறப்பட்டார். மீண்டும் வீடு திரும்பவில்லை என குடும்பத்தினர் மணலி போலீசில் புகார் அளித்தனர். ராயபுரத்தில் உள்ள கிரேஸ் கார்டன் 3வது சந்தில் உள்ள ஒரு வீட்டுக்கு, சக்கரபாணி சென்றதை செல்போன் சிக்னல் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர். 39 வயதான தமீம் பானு என்பவரின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். வீட்டினுள் நுழைந்ததும் ரத்த வாடை வீசியது. தலை துண்டிக்கப்பட்ட நிலையில், சக்கரபாணியின் உடல் பிளாஸ்டிக் கவரால் சுற்றப்பட்டு, வீட்டின் ஒரு மூலையில் கிடத்தப்பட்டிருந்ததைக் கண்டு போலீசார் அதிர்ந்தனர். பானுவும் அவரது தம்பியும் சக்கரபாணியை கொன்றது விசாரணையில் தெரிந்தது.
வாசகர் கருத்து