மாவட்ட செய்திகள் மே 14,2022 | 00:00 IST
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கல்குறிச்சி வைகை ஆற்று பகுதியில் மணல் குவாரி அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து குவாரி ஏலம் எடுத்தவர்கள் ஆற்றுப் பாலத்தின் அருகில் இருந்து மணல் குவாரிக்கு செல்ல பாதை அமைத்து வந்துள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு அனைத்து விவசாயிகள் சங்கம் மற்றும் கல்குறிச்சி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மக்கள் குவாரி அமைய உள்ள பகுதிகளில் நின்று அரை நிர்வாணத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதை அமைக்கும் பணிக்காக கொண்டுவரப்பட்ட பொக்லைன்,ஜேசிபி இயந்திரங்கள் மீது ஏறி நின்று கோஷம் போட்டு மணல் குவாரி அமைப்பதற்கு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.
வாசகர் கருத்து