Advertisement

ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி காத்திருப்பு போராட்டம்

மாவட்ட செய்திகள் மே 15,2022 | 17:42 IST

Share

தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பாரதிபுரம் குடியிருப்பு பகுதியில் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த 1991 ஆம் ஆண்டு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 140 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டது. இது தவிர இந்த கிராமத்தில் எதிர்கால தேவைக்காக பொது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொது இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டுமான பணிகளையும், விவசாய நிலமாக மாற்றும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், வீட்டு மனைப்பட்டாகளை தனித் தனியாக கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும், எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சமுதாயக் கூடம், நூலகம், அங்கன்வாடி, விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து கிராம மக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X