மாவட்ட செய்திகள் மே 15,2022 | 18:03 IST
பெங்களூரில் இயங்கி வரும் பேட்டரி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு தேவையான மோட்டார் மற்றும் உதிரி பாகங்கள் சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ரூ.32 லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்களை சென்னை விமான நிலையத்தில் இறக்கி அதை ஒரு தனியார் லாரி நிறுவனம் மூலம் சென்னையிலிருந்து பெங்களூருக்கு எடுத்து சென்றுள்ளனர். மினி லாரியை சென்னையை சேர்ந்த அருள்குமார் ஒட்டி சென்றுள்ளார். லாரியை வாணியம்பாடி நெக்குந்தி சுங்க சாவடி பகுதியில்நிறுத்தி விட்டு சாவியை லாரியிலேயே விட்டு டிரைவர் டீ குடிக்க சென்றுள்ளார். திரும்புவதற்குள் மர்ம நபர்கள் மினி லாரியை கடத்தி சென்றுள்ளனர். அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியை பிடிக்க முயன்றும் முடியவில்லை. வாணியம்பாடி போலீசார் லாரியை கடத்தி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து