Advertisement

அரிய வகை விலங்குகள் கடத்தல் சென்னை ஏர்போர்ட்டில் பறிமுதல்

பொது மே 17,2022 | 09:00 IST

Share

தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் இருந்து சென்னை வந்த பயணிகளின் உடமைகளை ஏர்போர்ட் அதிகாரிகள் செக் செய்தனர். சென்னையை சேர்ந்த ஒரு இளைஞர் அட்டைப்பெட்டிக்குள் வெள்ளை நிற முள்ளம்பன்றி , டாமரின் குரங்கு குட்டி வைத்திருந்தார். வளர்ப்பதாக வாங்கி வந்ததாக இளைஞர் கூறினார். வெளிநாட்டில் இருந்து உயிரினங்களை வாங்கி வரும்போது , சர்வதேச வனவிலங்கு பாதுகாப்பு துறையிடம் தெரிவித்து, விலங்குகளுக்கு மருத்துவ பரிசோதனை சான்றிதழ் பெற வேண்டும். ஆனால் இளைஞரிடம் அதற்கான ஆவணங்கள் இல்லை.எனவே விலங்குகளை பறிமுதல் செய்தனர். தாய்லாந்துக்கே அனுப்ப ஏற்பாடு நடக்கிறது. இளைஞரிடம் சுங்க அதிகாரிகள் , மத்திய வன உயிரின பாதுகாப்பு குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


வாசகர் கருத்து


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

தேடுக
loading

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X