பொது மே 17,2022 | 13:34 IST
திண்டுக்கல், பள்ளப்பட்டி ஊராட்சி கந்தப்பக்கோட்டை கிராமத்தில், அண்ணன் தம்பி ஆதித்யா, சத்திரியன் உட்பட 3 பேர் மினி வேனில் மீன் விற்பனை செய்து வந்தனர். ரோடு நடுவே வாகனத்தை நிறுத்தி இருந்ததால், பைக்கில் வந்த அப்பகுதி இளைஞர்கள் 2 பேர், வேனை ஓரமாக நிறுத்த சொன்னார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு ஆனது. வியாபாரிகள் இளைஞர்களை தாக்கினர். பைக்குகளை உடைத்தனர். இது தெரிந்த இளைஞர்களின் உறவினர்கள் பள்ளப்பட்டி அருகே இருந்த மீன் வேன் கண்ணாடியை நொறுக்கினர். வியாபாரிகள் மதுரையில் இருந்து அடி ஆட்களை வரவழைத்தனர். உருட்டுக்கட்டை, பட்டாக்கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கும்பல், கந்தப்பக்கோட்டை கிராமத்தை சூறையாடியது. கார், ஆட்டோ, பைக் உள்ளிட்ட வாகனங்களை அடித்து நொறுக்கினர். ஐந்துக்கு மேற்பட்ட பெட்ரோல் குண்டுகளை வீசினர். அலறியடித்து ஓடிய மக்களை விரட்டிசென்று வெட்டினர். வீடுகளை அடித்து நொறுக்கினர். ஆடு, மாடுகளையும் வெட்டினர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.. 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அட்மிட் செய்தனர். திண்டுக்கல் தேனி சரக டிஐஜி ரூபேஷ்குமார் மீனா மற்றும் எஸ்பி சீனிவாசன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். 200க்கு மேற்பட்ட போலீசார் கந்தப்பக்கோட்டை கிராமத்தில் குவிக்கப்பட்டனர். வன்முறை கும்பலை பிடிக்க போலீஸ் தனிப்படை அமைத்துள்ளது
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: