பொது மே 18,2022 | 18:37 IST
குஜராத் மாநிலம் மோர்பி (Morbi) மாவட்டம் ஹல்வாட் (Halvad) பகுதியில் சாகர் உப்பு தொழிற்சாலை உள்ளது. அங்கு சாக்கு மூட்டையில் உப்பு நிரப்பும் பணி நடந்துக் கொண்டிருந்தபோது பக்கவாட்டு சுவர் திடீரென இடிந்து விழுந்தது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. இதுவரை 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக மாநில தொழிலாளர் அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்தார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடக்கிறது. இறந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்து தன் இதயத்தை உருக்குவதாக குறிப்பிட்டுள்ளார். இறந்தவர் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மாநில அரசு சார்பில் 4 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். மீட்பு பணிகளை துரிதபடுத்தும்படி மாவட்ட கலெக்டர், அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
வாசகர் கருத்து (1) வரிசைப்படுத்து: