மாவட்ட செய்திகள் மே 18,2022 | 20:47 IST
திருச்சி, மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதிகளுக்கு குளித்தலை காவிரி ஆற்றிலிருந்து ஆழ்குழாய் கிணறு அமைத்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மணப்பாறையிலிருந்து குளித்தலை செல்லும் சாலையில் மாகாளிபட்டி பாலம் அருகில் இன்று குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது 20 அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் பீறிட்டு வெளியேறியது. நீண்ட நேரம் குடிநீர் வீணாக வெளியேறியதால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணானது. குடிநீர் தட்டுப்பாடு உள்ள நிலையில் இதுபோன்ற குழாய் உடைப்புகளால் குடிநீர் வீணாவதை அதிகாரிகள் தடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து