மாவட்ட செய்திகள் மே 18,2022 | 20:49 IST
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே இலுப்பையூரில் வரலாற்றுத்துறை பேராசிரியர் விஜயராகவன் தலைமையில் மாணவர்கள் மேற்கொண்ட ஆய்வில் 9 - 10ம் நுாற்றாண்டைச் சேர்ந்த முற்கால பாண்டியர் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் விஜயராகவன் கூறுகையில், இந்த நடுகல் 6 அடி உயரம், 2.5 அடி அகலம் கொண்டது. கல் மேல் பகுதியில் 11 வரிகள் கொண்ட, வட்டெழுத்து காணப்படுகிறது. இரு ஊர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் புல்லன் சாத்தன் என்ற வீரர், ஒரு ஊரை வென்று, போரில் உயிர் நீத்தார் என கல்வெட்டு கூறுகிறது என்றார்.
வாசகர் கருத்து