பொது மே 20,2022 | 12:24 IST
துருக்கியில் 12வது மகளிர் குத்துசண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. 52 கிலோ உடல் எடை பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் நிகாத் ஜரீன் (Nikhat Zareen) தாய்லாந்து வீராங்கனை ஜுடாமஸ் ஜிட்பாங்குடன் (Jutamas Jitpong) மோதினார். தொடக்கம் முதலே நிகாத் அதிரடியாக ஆடினார். இறுதியில் 5-0 என்ற புள்ளி கணக்கில் தங்க பதக்கத்தை தட்டினார். தங்கம் வென்றதன் மூலம் உலக செம்பியன் பட்டத்தை கைப்பற்றிய 5வது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார் நிகாத் ஜரீன் . இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். ஜரீனின் வெற்றி அனைத்து இளம் வீராங்கனைகளுக்கு உத்வேகமாக அமையும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (2) வரிசைப்படுத்து:
மேலும் 1 கருத்துக்கள்...