மாவட்ட செய்திகள் மே 21,2022 | 00:00 IST
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த செங்கமலவல்லி உடனாகிய ஸ்ரீஆமருவியப்பன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் 108 திவ்ய தேசங்களில் 10-வது திவ்ய தேசமாகும். இக்கோவிலின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. செங்கமலவல்லி உடனாகிய ஆமருவியப்பன் பெருமாள் தேரில் எழுந்தருள தீபாராதனை செய்யப்பட்டு தேரோட்டம் துவங்கியது. பக்தர்கள் பாண்டுரங்கா கோவிந்தா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். 4 ரத வீதிகளில் தேர் வலம் வந்து நிலையை அடைந்தது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து